வடக்கு கிழக்கிலும் நினைவேந்தலுக்கு தடை விதிக்க வேண்டும்: கொக்கரிக்கும் மொட்டுக் கட்சி
தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு எதிராகக் கொழும்பில் மாத்திரமன்றி வடக்கு, கிழக்கிலும் நீதிமன்றங்கள் தடை உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என ஆளுங்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை செய்யாவிடின் தமிழ் - சிங்கள இனங்களுக்கிடையில் வன்முறைகள் வெடித்து இன நல்லிணக்கமும் மத நல்லிணக்கமும் சீர்குலையும் எனவும் அக் கட்சி குறிப்பிட்டுள்ளது.
அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் எம்.பி. இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
தடை உத்தரவு
என்ன தான் தியாகத்தைத் திலீபன் செய்தாலும் அவர் ஓர் பயங்கரவாதி. அவரைக் கொழும்பில் நினைவேந்த நீதிமன்றங்கள் தடை உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளன.

அதேபோல் மூவின மக்களின் ஒற்றுமையைக் கருதி வடக்கு, கிழக்கில் உள்ள நீதிமன்றங்களும் திலீபனை நினைவேந்தும் நிகழ்வுகளுக்குத் தடை உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும்.
எதிர்வரும் காலங்களில் விடுதலைப்புலிகள் சம்பந்தப்பட்ட அனைத்து நினைவேந்தல் நிகழ்வுகளுக்கும் நீதிமன்றங்கள் தடை உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும்.
சிங்கள மக்கள் மீண்டுமொரு வன்முறையை விருப்பவில்லை போரை விரும்பவில்லை. தமிழ் அரசியல்வாதிகள்தான் சிங்கள மக்களைச் சீண்டும் வகையில் செயற்படுகின்றார்கள். அப்படி அவர்கள் செயற்படும் போது சிங்கள மக்கள் கைகட்டி வேடிக்கை பார்க்க மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.
| நட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam
இலங்கை அருகே... ஈரான் கப்பல் மீது நீர்மூழ்கியால் தாக்குதல் நடத்தியதை அறிவித்த அமெரிக்கா News Lankasri
சிந்தாமணியால் சிக்கலில் சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam