12 நாட்கள், 12 கருப்பொருள்கள், 12 இடங்கள் – பிரித்தானியாவில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்

Sri Lankan Tamils Tamils London United Kingdom
By Rusath Sep 21, 2026 11:47 AM GMT
Report

தியாக தீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னிட்டு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் பிரித்தானியா முழுவதும் முன்னெடுக்கப்படும் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் மற்றும் அரசியல் விழிப்புணர்வு செயற்திட்டத்தின் ஆறாவது நாள் நிகழ்வு லண்டனில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு திங்கட்கிழமை (20.09.2026) ஹவுன்ஸ்லோ (Hounslow) பகுதியில் நடைபெற்றுள்ளது.

 உண்ணாவிரதப் போராட்டம்

தியாக தீபம் திலீபன் 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நல்லூர் ஆலய முன்றலில் நீராகாரம்கூட அருந்தாமல், அகிம்சை வழியில் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தார்.

அவரது தியாகத்தை நினைவுகூரும் வகையில், “12 நாட்கள், 12 கருப்பொருள்கள், 12 இடங்கள்” என்ற அடிப்படையில் பிரித்தானியா முழுவதும் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டமும் அரசியல் விழிப்புணர்வு செயற்திட்டமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

12 நாட்கள், 12 கருப்பொருள்கள், 12 இடங்கள் – பிரித்தானியாவில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் | Thiyaga Deepam Thileeban London

இதன் ஆறாவது நாள் நிகழ்வில், “இலங்கை அரசின் இனவழிப்பு திட்டமும் தீவிரமடையும் தமிழ் மக்களின் பாதுகாப்புப் பிரச்சினையும்” என்ற கருப்பொருள் முன்னிறுத்தப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

காலை 10 மணி முதல் பிற்பகல் வரை நடைபெற்ற அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள், தாயக விடுதலைக்காகத் தியாகம் செய்தவர்களை நினைவுகூர்ந்து அக வணக்கத்துடன் நிகழ்வை ஆரம்பித்துள்ளனர்.

தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படம்

தொடர்ந்து, தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படத்திற்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினரான கோபாலன் பிரசாத் மலர்மாலை அணிவித்துள்ளார். உதயநிஷா ஈகைச் சுடரேற்றியதைத் தொடர்ந்து, கலந்துகொண்டவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

நிகழ்வில் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள், வரலாற்றுப் போராட்டங்கள் மற்றும் தியாக தீபம் திலீபனின் தியாகம் தொடர்பான விழிப்புணர்வு உரைகளும் நினைவுப் பகிர்வுகளும் இடம்பெற்றுள்ளன.

12 நாட்கள், 12 கருப்பொருள்கள், 12 இடங்கள் – பிரித்தானியாவில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் | Thiyaga Deepam Thileeban London

1987ஆம் ஆண்டு தியாக தீபம் திலீபன் முன்வைத்த ஐந்து அம்சக் கோரிக்கைகள் 39 ஆண்டுகள் கடந்த நிலையிலும் நிறைவேற்றப்படவில்லை என நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், பதாகைகள் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் மூலம் தமிழ் மக்களின் அரசியல் வரலாறும் உரிமைக் கோரிக்கைகளும் பொதுமக்களின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன.

தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றையும் அதன் படிப்பினைகளையும் புதிய தலைமுறையினரிடம் எடுத்துச் செல்வதே இச்செயற்திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பருத்தித்துறை

தியாகதீபம் திலீபன் அவர்களது 39 ஆவது ஆண்டு நினைவின் 7 ம் நாள் நினைவேந்தல் பருத்தித்துறையில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் நினைவகத்தில் பருத்துத்துறை நகர சபை உறுப்பினர் ஜெயானந்தம் ஜெயகோபி தலைமையில்இன்று(21.9.2026) காலை இடம் பெற்றது.

இதில் ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் சி.வேந்தன், பருத்தித்துறை நகரசபை உறுப்பினர்கள், அரசியல் செயற்பாடாளர்கள், என பலரும் கலந்துகொண்டு மலர் அணிவித்து மலர் அஞ்சலி செய்தும் நினைவேந்தலில் ஈடுபட்டனர்.

சவூதி தூதரகத்தை முற்றுகையிட்ட அனோஜனின் குடும்பத்தினர்

சவூதி தூதரகத்தை முற்றுகையிட்ட அனோஜனின் குடும்பத்தினர்

2026 க.பொ.த. உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

2026 க.பொ.த. உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US