அரகலய மூலம் அநுரவுக்கு கிடைத்த பல பில்லியன்கள்! நீதிமன்றில் பகிரங்க மன்னிப்பு கோரிய முன்னாள் எம்.பி
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தொடர்பில் வெளியிட்ட கருத்துக்காக வருந்துவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
நீதிமன்றில் அவர் இவ்வாறு தனது வருத்தத்தை வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி தொடாபில் வெளியிட்ட கருத்துக்காக நிபந்தனையின்றி வருத்தம் வெளியிடுவதாக திஸ்ஸ குட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தொடர்ந்த வழக்கு
கொழும்பு மாவட்ட நீதிமன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
தமக்கு எதிராக அவதூறு பிரசாரம் செய்வதாகக் கூறி அதற்கு நட்ட ஈடாக 10 பில்லியன் ரூபா நட்டஈடு வழங்கப்பட வேண்டுமென கோரி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் முன்னிலையான திஸ்ஸ குட்டியாரச்சி, தனது சட்டத்தரணிகள் ஊடாக தாம் வெளியிட்ட கருத்துக்காக நிபந்தனையற்ற வருத்தத்தை வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அரகலய என்றழைக்கப்பட்ட போராட்ட காலத்தில் கிடைக்கப் பெற்ற பெருந்தொகை பணத்தை மோல்டா நாட்டில் முதலீடு செய்துள்ளதாகவும், சுமார் ஐந்து பில்லியன் ரூபா பணம் இவ்வாறு முதலீடு செய்யப்பட்டுள்ளாகவும் திஸ்ஸ குட்டியாரச்சி கொழும்பில் வைத்து கடந்த 2023ம் ஆண்டு குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளின் போது தமது கருத்துக்காக வருந்துவதாக திஸ்ஸ குட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.





10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri
