முகக்கவசங்களை அணிவதன் மூலம் ஏற்படவுள்ள நன்மை! வைத்திய நிபுணர் வெளியிடும் தகவல்
முகக்கவசங்களை அணிவதன் மூலம், கோவிட் தடுப்பூசி ஏற்றிக்கொள்வதன் மூலம் பெற்றுக்கொள்ளக் கூடிய பாதுகாப்பிற்கு நிகரான பாதுகாப்பினை பெற்றுக்கொள்ள முடியும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
குடும்ப நல நிபுணத்துவ மருத்துவர் சங்கத்தின் தலைவர் நிபுணத்துவ மருத்துவர் மல்காந்தி கல்ஹெனா (Malkanthi Kalhena) இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
தற்போதைய கோவிட் சுகாதார வழிகாட்டல்களை மக்கள் மறந்து விட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்வதாகவும் இதன் மூலம் அவர்கள் மற்றுமொரு கோவிட் அலைக்கு அழைப்பு விடுக்கின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெளியே செல்லும் போது முகத்தை தேவையில்லாமல் தொட வேண்டாம் எனவும் அனைத்து அடிப்படை சுகாதார வழிகாட்டல்களையும் பின்பற்றுவது அவசியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேவையற்ற வகையிலான பயணங்களை தவிர்க்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேநீர் கடை மீது வான்வழி தாக்குதல் - கால்பந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்த 18 பேர் உயிரிழப்பு News Lankasri
காயத்ரி பிரச்சனை முடிந்ததும் சோழனை தனியாக அழைத்துச்சென்று நிலா சொன்ன விஷயம்... அய்யனார் துணை சீரியல் அடுத்த கதைக்களம் Cineulagam