இது தேர்தல் காலம் அல்ல! வஜிர அதிரடி கருத்து
"நாட்டின் நிலைமையைத் தெரிந்துகொண்டும் தேர்தல் வேண்டும் என்று சிலர் பிடிவாதமாகச் செயற்படுகின்றனர். இது தேர்தல் காலம் அல்ல. அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை மீளக்கட்டியெழுப்பும் நேரமே இது."என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடக்காது

அவர் மேலும் கூறுகையில், "தற்போது தேர்தலை நடத்தக் கூடிய நிலைமை இல்லை என்று தெரிந்தும் கூட சிலர் தேர்தல் வேண்டும் என்று அடம்பிடிக்கின்றனர்.
இப்போது தேர்தல் நடக்காது என்ற துணிவில்தான் அவர்கள் இவ்வாறு பிடிவாதமாகச் செயற்படுகின்றனர். முதலில் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை மீளக்கட்டியெழுப்புவோம். அதன்பின்னர் தேர்தலை நடத்துவோம்"என தெரிவித்துள்ளார்.
May you like this Video
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri
உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்! Manithan