வரலாற்றில் பெருந்தொகை உள்நாட்டுக்கடனை பெற்ற அரசாங்கம்: ராஜித சேனாரட்ன
இந்த அரசாங்கத்தின் ஆட்சி ஐந்து வருடங்கள் அல்ல ஐந்து மாதங்கள் வரையிலும் நீடிக்காது என முன்னாள் சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையலான தேசிய மக்கள் சக்தியினால் ஐந்து மாதங்களுக்கு ஆட்சியை நீடிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
களுத்துறையில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

நெருக்கடி நிலைமை
எதிர்வரும் மார்ச் மாதம் அளவில் நாட்டில் பாரிய நெருக்கடி நிலைமை உருவாகும் எனவும்,இந்த அரசாங்கம் ஆட்சியை பொறுப்பேற்றுக்கொண்டது முதல் இதுவரையில் ஒரு ட்ரில்லியன் ரூபா வரையில் உள்நாட்டுக் கடன் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
வரலாற்றில் வேறு எந்த அரசாங்கமும் இவ்வாறு கடன் பெற்றுக்கொண்டதில்லை என டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திருமணம் ஆகாமல் கருவுற்றால் அபராதம்! மணமுடிக்காமல் ஒன்றாக வாழ்ந்தால் 70 டொலர்..எங்கு தெரியுமா? News Lankasri
ஜேர்மனியில் தொழிற்சாலைகள் மூடப்படுவதால் மற்றொரு ஐரோப்பிய நாட்டிற்க்கு அதிகரிக்கும் வணிக வாய்ப்புகள் News Lankasri