நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது
நாட்டில் தேசிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என ராஜாங்க அமைச்சர் ரீ.பி. சரத் தெரிவித்துள்ளார்.
சாதாரண பொதுமக்கள் வீதியில் இறங்கி நடப்பதற்கான பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.
சாதாரண பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் எந்தவொரு பாதாள உலகக் குழு உறுப்பினர்களையும் பாதுகாக்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட முடியாது எனவும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கினால் நாட்டுக்கு எவ்வாறான நிலைமை ஏற்படும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த காலங்களில் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன ஆட்சிக் காலத்தில் ‘கோனவல சுனில்’ என்ற குற்றவாளி ஒருவருக்கு சமாதான நீதவான் பதவி வழங்கப்பட்டதாகவும், ரணசிங்க பிரேமதாசா ஆட்சியில் ‘சொத்தி உபாலி’ போன்ற குற்றவாளிகள் அரசினால் பாதுகாக்கப்பட்டதகாவும் தெரிவித்துள்ளார்.
எனினும் தற்போதைய அரசாங்கம் அவ்வாறு குற்றம் இழைத்தவர்களை பாதகாக்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.