யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த திருமாவளவன்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
நேற்றைய தினம், யாழ்ப்பாணம் விமான நிலையத்தின் ஊடாக சென்ற அவரை தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் வரவேற்றுள்ளார்.
மலர்க் கண்காட்சி
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு நடாத்துகின்ற 'கார்த்திகை வாசம்' மலர்க்கண்காட்சி நல்லூர் கிட்டு பூங்காவில் (சங்கிலியன் பூங்கா) இன்று (14.11.2025) பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இத்தொடக்க விழாவில் கௌரவ விருந்தினராகக் கலந்து கொள்வதற்காக தொல்.திருமாவளவன் யாழிற்கு சென்றுள்ளார்.
அத்தோடு தொல்.திருமாவளவன் நேற்று முள்ளிவாய்க்காலுக்கும் சென்று அஞ்சலி செலுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நடிகை குஷ்புவா இது.. 20 வயதில் அடையாளம் தெரியாத அளவுக்கு எப்படி இருந்திருக்கிறார் பாருங்க! Cineulagam
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam