திருக்கேதீஸ்வர ஆலய மஹா கும்பாபிஷேகத் திருவிழா: புதிய சிலைகளும் திறந்து வைப்பு(Photo)
மன்னார் திருக்கேதீஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக நிகழ்வை முன்னிட்டு எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு இன்று(3) காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வு திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு சிவ சிறி தியாகராஜா கருணானந்த குருக்கள் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
சிலைகள் திறந்து வைப்பு
இதேவேளை, திருக்கேதீஸ்வர ஆலய பாலாவி தீர்த்தக்கரையில் ஆறுமுக நாவலருக்கான சிலையும், திருக்கேதீஸ்வர ஆலயத்தில் உள் நுழையும் வீதியில் சுமார் 28 அடி நீளமான சிவன் சிலையும் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.
திருவிழா
தொடர்ந்தும் நாளை(04) மற்றும் நாளை மறுதினம்(05) இந்நிகழ்வு நடைபெறுவதுடன், 5 ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு நிறைவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் கிரியைகள் இடம்பெற்று 6 ஆம் திகதி புதன்கிழமை காலை சுபமுகூர்த்த
வேளையில் மஹா கும்பாபிஷேக பெருவிழா இடம்பெறவுள்ளது என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.










இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இதெல்லாம் ஒரு பொழப்பா? இந்த காசு தேவையா? பயில்வான் ரங்கநாதனுக்கு சரியான நெத்தியடி கொடுத்த கலா மாஸ்டர் Manithan

எனது குரல் செட் ஆகவில்லை! ஷங்கர் மகளின் வாய்ப்பு குறித்து வருத்தத்துடன் ராஜலட்சுமி விளக்கம் Manithan

சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடிக்கும் விஜய் டிவி பிரபலம் ! யார் பாருங்க Cineulagam

காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற மனைவி தீபிகாவுக்கு தினேஷ் கார்த்திக் தந்த முதல் ரியாக்ஷன்! புகைப்படம் News Lankasri

லொட்டரியில் வென்ற 14 கோடி ரூபாய் பணத்தை கழிவறையில் ஃபிளஷ் செய்த பெண்., சொன்ன அதிர்ச்சியூட்டும் காரணம்! News Lankasri
