முப்பது இலட்சம் மதிக்கத்தக்க போதை பொருளுடன் ஒருவர் கைது (Photos)
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் முப்பது இலட்சம் ரூபா மதிக்கத்தக்க அபின் போதை பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார (Lasantha Bandara) தெரிவித்துள்ளார்.
வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவப் புலனாய்வு துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டாரவின் வழிகாட்டலில் குற்ற புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி ஈ.ஏ.டபள்யூ.எஸ்.எதிரிசிங்க தலைமையிலான பொலிஸ் உத்தியோகத்தர்களான ஜே.பகீர்தரன், விக்ரம சேகர, எஸ். பண்டார ஆகியோகர் அடங்கிய குழுவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே அபின் போதைப் பொருளும் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டள்ளனர்.
வாழைச்சேனை அல் அக்ஷா வீதியில் சந்தேக நபரின் சகோதரியின் வீட்டினை சுற்றி வளைத்த போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 500 கிராம் அபின் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், ஓட்டமாவடி புகையிரத நிலைய வீதியைச் சேர்ந்த் 39 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபருடன் தொடர்புடைய வியாபாரிகள் வேறு யாராவது இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருவதுடன் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் போதைப்பொருள் பாவனையை இல்லாமல் செய்வதற்கு பொலிஸாருடன் இணைந்து வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவ புலனாய்வு அதிகாரிகளும் இணைந்து செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan