IMF உடனான மூன்றாவது மீளாய்வு கூட்டம் சுமூகமாக நிறைவு
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய (IMF) திட்டத்தின் மூன்றாவது மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல்கள் இன்று 22) நிறைவடைந்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இது தொடர்பான சந்திப்பில் சர்வதேச நாணய நிதியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவொன்று, சிரேஸ்ட தூதுவர் பீட்டர் ப்ரூயர் தலைமையில் கலந்துகொண்டது.
பொருளாதார அபிவிருத்தி
இந்த கூட்டத்தில் இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவுக்கு, பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தலைமை தாங்கியுள்ளார்.

இக்கூட்டத்தின் போது, சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான மூன்றாவது மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல்கள் வெற்றிகரமாக முடிவடைந்ததாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உத்திரம் நட்சத்திரத்தில் நுழையும் சுக்கிரன்: இந்த 4 ராசிகளுக்கு சவாலான காலமாக இருக்கும் ஜாக்கிரதை! Manithan
தமிழ்நாட்டில் இல்லை.. முக்கிய இடத்தில் முதல் வெற்றியை பதிவு செய்த ஜனநாயகன்.. வசூல் வேட்டை Cineulagam