வானில் இன்று ஏவப்படவுள்ள நாட்டின் மூன்றாவது நனோ செயற்கைக்கோள்
இலங்கை பொறியியலாளர்களின் தொழில்நுட்ப பங்களிப்புகளுடன் உருவாக்கப்பட்ட நாட்டின் மூன்றாவது நனோ செயற்கைக்கோள் இன்று (19) சுற்றுப்பாதையில் செலுத்தப்பட உள்ளது என்று விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்துள்ளது.
BIRDS-X DRAGONFLY என பெயரிடப்பட்ட இந்த நனோ செயற்கைக்கோள், கடந்த ஓகஸ்ட் 24ஆம் திகதி நாசாவால் ஏவப்பட்ட SPX33 ரொக்கெட் மிஷன் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
சுற்றுப்பாதை
இந்தநிலையில் இன்று இலங்கை நேரப்படி பிற்பகல் 2.15 க்கு சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சுற்றுப்பாதையில் செலுத்தப்பட உள்ளது.
இலங்கையின் முதல் நனோ செயற்கைக்கோளான ராவணா-1 செயற்கைக்கோள் 2019 ஆம் ஆண்டிலும் ஐந்து சர்வதேச பங்காளர்களை உள்ளடக்கிய தொழில்நுட்ப ஒத்துழைப்பு திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட KITSUNE செயற்கைக்கோள் 2022 ஆம் ஆண்டிலும் ஏவப்பட்டது.
இதனை தொடர்ந்து ஏவப்படும் நாட்டின் மூன்றாவது நனோ செயற்கைக்கோளான BIRDS-X டிராகன்ஃபிளை ஆராய்ச்சி செயற்கை கோள் இலங்கையின் விண்வெளி தொழில்நுட்ப மேம்பாட்டு பயணத்தில் மற்றொரு குறிப்பிடத்தக்க சாதனையைக் குறிக்கிறது என்று விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri
