நாட்டை பற்றி சிந்தித்து ஆர்ப்பாட்டங்களை நிறுத்துங்கள்-குமார வெல்கம
நாட்டை பற்றி சிந்தித்து ஆர்ப்பாட்டங்களை ஒரு வருடத்திற்கேனும் நிறுத்துமாறு நாட்டின் சகல பிரஜைகளிடம் கோரிக்கை விடுப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வரவு செலவுத்திட்டத்தின் மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஆர்ப்பாட்டங்கள் நடந்தால் சுற்றுலாப் பயணிகள் வர மாட்டார்கள்
ஆர்ப்பாட்டங்களை நடத்துவதன் மூலம் நாட்டை முன்னேற்ற முடியாது. சுற்றுலாப பயிணகள் வந்தால் மட்டுமே நாட்டுக்கு டொலர் கிடைக்கும். இல்லாவிட்டால் டொலர் கிடைக்காது. ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் போது சுற்றுலாப் பயணிகள் வர மாட்டார்கள்.
மேலும் வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்கள் இலங்கைக்கு சட்ட ரீதியான வழிகளில் பணத்தை அனுப்பாது உண்டியல் முறையில் மூலம் நாட்டுக்கு பணத்தை அனுப்புகின்றனர். இதன் காரணமாக அரசுக்கு நாட்டுக்கும் பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
அத்துடன் அரச நிறுவனங்களின் ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரித்தமைக்கு அவையில் உள்ள அனைவரும் பொறுப்புக்கூற வேண்டும். நானும் களுத்துறை மாவட்டத்தை சேர்ந்தவர்களை அரச சேவைகளில் சேர்த்தேன் எனவும் குமார வெல்கம மேலும் தெரிவித்துள்ளார்.





அதிரவைக்கும் திருப்பம்... இஸ்ரேல் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரும் உலகளாவிய யூத பிரபலங்கள் News Lankasri

இன்னும் 2 நாட்களில் நடக்கவிருக்கும் புதன் பெயர்ச்சி- தலைவிதியே மாறப் போகும் ராசியினர் யார்? Manithan
