மிகப் பெரிய பண மோசடி! திலினி பிரியமாலி தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
காசோலை மோசடி தொடர்பாக திலினி பிரியமாலிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஜூன் மாதம் 5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் விசாரிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
தங்காலை பகுதியைச் சேர்ந்த சமித அனுருத்த என்பவருக்குச் சொந்தமான காரினை 2013ம் ஆண்டு வாங்கி, மூடப்பட்டுள்ள வங்கிக் கணக்கில் இருந்து 80 இலட்சம் பெறுமதியான காசோலை ஒன்றினை வழங்கி மோசடி செய்ததாக திலினி பிரியமாலிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
நீதிமன்றின் உத்தரவு
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், தமது வாடிக்கையாளர் சமரச தீர்வுக்கு தயாராக இருப்பதாகவும், அதற்கு இரண்டரை மாத கால அவகாசம் வழங்குமாறும் நீதிமன்றில் கோரினர்.
மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், சமரச தீர்வு தொடர்பில் இதுவரை இணக்கப்பாடு எட்டப்படவில்லை என நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.