திலினியின் தங்கக்கட்டிகளின் பின்னணியிலுள்ள மர்மம் - தேடுதல் வேட்டையில் குற்ற புலனாய்வு பிரிவு
பிரபல நடிகர் புபுது சதுரங்க மற்றும் அவரது மனைவி நடிகை மாஷி சிறிவர்தன ஆகியோரின் வாக்குமூலங்களை இரகசிய பொலிஸார் பதிவு செய்ய உள்ளனர்.
பில்லியன் கணக்கான டொலர்களை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பிலானது.
கொழும்பு ஷங்கிரிலா ஹோட்டலில் நடைபெற்ற மாயா திரைப்படத்தின் முஹுரத் விழாவிற்கு பணம் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் பிரியாமாலியின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொலிஸாரின் தங்க வேட்டை
இதேவேளை, தொழிலதிபர்களை ஏமாற்றுவதற்காக திலினி பிரியமாலி பயன்படுத்திய போலி தங்கக் கட்டிகளாக தயாரித்தவர்களைக் கண்டுபிடிக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பித்தளை கட்டிகள் உண்மையான தங்கக் கட்டிகளாகத் தோன்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதால், குறித்த பித்தளைக் கட்டிகளைத் தயாரித்த நபர்களை அடையாளம் கண்டால் பல தகவல்களை வெளிப்படுத்த முடியும் என்று குற்ற புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிஐடியினர் விசாரணை
தங்க கட்டிகள் எனக் கூறி பல வர்த்தகர்களுக்கு திலினி இந்த பித்தளை கட்டிகளை வழங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. எனினும் அந்த வர்த்தகர்களிடம் இருந்து இதுவரை எவ்வித முறைப்பாடுகளும் கிடைக்கப்பெறவில்லை என குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திலினியின் காதலன் என கூறப்படும் இசுருவின் வீட்டிலிருந்து இவ்வாறான 08 பித்தளைப் கட்டிகளை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அண்மையில் கண்டுடெடுத்துள்ளனர்.
