தியாக வேள்வியை உலகம் அறியச்செய்ய அனைவரும் நல்லூரில் அணி திரளுங்கள்! வேலன் சுவாமிகள் அழைப்பு
அகிம்சை போராட்டத்தின் தியாக வேள்வியில் உயிர் நீத்த திலீபனின் நினைவு நாளில் உண்ணாவிரதத்தை அனுஷ்டிப்பதற்கு அனைவரும் நாளை ஞாயிற்றுக்கிழமை நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் காலை 8மணிக்கு ஒன்று கூறுமாறு திலீபன் நினைவேந்தல் கட்டமைப்பு சார்வில் வேலன் சுவாமிகள் அழைப்பு விடுத்துள்ளார்.
இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
தீபம் திலீபன் முன்வைத்த ஐந்து அம்ச கோரிக்கைகள்
தமிழ் மக்களுக்காக உண்ணா நோன்பிருந்து தனது இன்னுயிரை நீத்த தியாக தீபம் திலீபன் முன்வைத்த ஐந்து அம்ச கோரிக்கைகள் இன்னும் நிறைவேறாமலே இருக்கிறது.
அகிம்சை வழியில் தமிழ் மக்களுக்கான கோரிக்கையை முன்னிலைப்படுத்தி நல்லூரில் திலீபன் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார். அவருடைய சிந்தனைகளை எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக நாளை காலை 8 மணிக்கு தொடக்கம் மாலை 5 மணி வரை திலீபனின் நினைவிடத்தில் அனைவரும் ஒன்று திரண்டு உண்ணாவிரதத்தில் ஈடுபட அழைக்கிறோம் என்றார்.
குறித்த ஊடக சந்திப்பில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் விஜயகுமார்,
மற்றும் குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் இணைப்பாளர் கோமகன் ஆகியோர் கலந்து
கொண்டனர்.


சுடலைக்கழிவு அரசியல்? 1 நாள் முன்

நடிகர் சத்யராஜா இது, திருமணத்தின் போது எப்படி இருந்துள்ளார் பாருங்க- இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam

கனடாவுக்குள் நுழைய புலம்பெயர்வோருக்கு இலவச டிக்கெட்கள்?: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri

விஜய்யின் பூவே உனக்காக பட புகழ் நடிகையா இது? இரண்டாவது திருமணம் செய்து எப்படி உள்ளார் பாருங்க Cineulagam

உளுந்து வடையில் நடுவில் ஓட்டை இருப்பதற்கு இதுதான் காரணமாம்! இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே Manithan

தனக்கு செம ஹிட் படம் கொடுத்த இயக்குனருடன் பேச்சு வார்த்தையில் நடிகர் அஜித்- யாருடன் தெரியுமா? Cineulagam
