தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்:கடற்தொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வாரத்தின் இறுதி நாள் நிகழ்வுக்கு ஆதரவளிக்கும் வகையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நாளைய தினம் கடற்தொழிலுக்கு செல்வதனை தவிர்க்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளன தலைவர் அ.அன்னராசா இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
கடற்தொழிலாளர்களுக்கு அழைப்பு
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு கோரி இந்திய அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து தியாக தீபம் திலீபன் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து உயிர்க்கொடை வழங்கிய நாள் நாளை மறுதினம் திங்கட்கிழமை 35ஆவது ஆண்டாக முன்னெடுக்கப்படுகிறது.
இந்த நினைவேந்தல் நிகழ்வுக்கு ஆதரவளிக்கும் வகையில் யாழ்ப்பபாணம் மாவட்ட கடற்தொழிலாளர்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை கடற்தொழிலுக்கு செல்வதனைத் தவிர்க்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.





ஹமாஸ் வசமிருந்த நான்கு பிணைக்கைதிகள் உடல்கள் மட்டுமே ஒப்படைப்பு: மீதமுள்ள உடல்கள் நிலை என்ன? News Lankasri

பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்றியாக ஆயிஷா: நாமினேஷன் பவர் கொடுத்த விஜய் சேதுபதி! Manithan
