அரசாங்கத்தை எதிர்க்கின்ற களம் தியாகதீபம் திலீபனது நினைவேந்தல் களம் அல்ல..! சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம்
அரசாங்கத்தை எதிர்க்கின்ற களம் தியாகதீபம் திலீபனது நினைவேந்தல் களம் அல்ல என்று அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அவர் தனது அலுவலகத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழ் தரப்பு
அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஐநாவை கையாள்வதில் அரசாங்கம் கவனமாக இருக்கின்றது, ஆனால் தமிழ் தரப்பு அதிகமாக அக்கறை காட்டுவதில்லை.
ஐக்கிய நாடுகளை சபையின் கதவுகளை தமிழ் தரப்பு தொடர்சியாக தட்டிக்கொம்டிருக்கவேண்டும், அரசாங்கம் ஐநா விடயத்தில் மிக கவனமாக கையாள்கிறது.
ஆனால் தமிழ் தரப்பு அதிகளவில் அக்கறை காட்டுவதில்லை, தமிழ் தரப்பு தொடர்சியாக உறுப்பு நாடுகளை சந்திக்கவேண்டும், ஐநாவின் கதவுகளை தொடர்சியாக தட்டிக்கொண்டிருக்கவேண்டும், என்றும் அரசாங்கத்தின் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் நேற்றைய தினம் தியாகி திலீபன் அவர்களது நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்தச் சென்றுள்ளார்.
நினைவேந்தல்
அவர் அங்கு தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தவிடாது தடுக்கப்பட்டமை மிகவும் மோசமான செயல் ஏனெனில் தியாகி திலீபன் அவர்களது நினைவிடம் என்பது ஒரு பொது இடம் அங்கு ஏதிரிகளுக்கு கூட நினைவேந்தல் செய்ய உரிமை உண்டு, இந்த உரிமையை தடுப்பதற்கு அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்பது எனது அபிப்பிராயம். ஆகவே தமிழ் தேசிய மக்கள் முன்னணி உடனடியாகவே அமைச்சர் சந்திரசேகரனிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் அவ்வாறு நடந்துகொள்வதுதான் உண்மையில் ஒரு தார்மீக பொறுப்பு என்று நான் நினைக்கின்றேன்.
இதில் தமிழ் மக்களது சுயமரியாதை, பண்பாடு என்பன. அடங்கியிருக்கின்றது. அஞ்சலி செலுத்த வருகின்ற ஒருவரை தடுத்து நிறுதிக்கொண்டு எங்களுக்கு அஞ்சலி செலுத்த உரிமையில்லை என்பறு சொல்லிவிட முடியாது, சரதவதேசத்திற்கு பிரச்சாரம் செய்யவும் முடியாது.
அமைச்சர் சந்திரசேகருக்கு எம்மை பலவீனப்படுத்த வேண்டும் என்கின்ற அரசியல் நோக்கமும் இருக்கலாம், ஐநாவின் பொறுப்புக் கூறல் விடயத்தை பலவீனப்படுத்தும் ஏண்ணமும் நிச்சயமாக இருக்கலாம், தமிழ் மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை பெறும் எண்ணமும் இருக்கலாம்.
அதனை எதிர்க்கின்ற களம் என்பது தியாக தீபம் திலீபனது நினைவேந்தல் அல்ல என்றும் தெரிவித்ததுடன் முன்னாள் ஜனாதிபதிகளுடைய சலுகை நீக்க சட்ட வாக்களிப்பு தொடர்பாக தமிழர் தரப்பு எடுத்து தீர்மானம் தொடர்பாகவும் கருத்து தெரிவித்துள்ளார்.



