தந்தைக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர் மீண்டும் அணியில் இணையும் துனித்
இலங்கை அணி நாளை(20) ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பங்களாதேசத்திற்கு எதிராக களமிறங்கும் போட்டியில் இளம் வீரர் துனித் கலந்து கொள்ள உள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.
மறைந்த தனது தந்தைக்கு இறுதி அஞ்சலி செலுத்த வீடு திரும்பிய துனித் வெல்லலெகே நாளை(20) காலை மீண்டும் அணியில் இணைவார்.
மீண்டும் அணியில்
அவர் அணி முகாமையாளர் மகிந்த ஹலங்கோடுடன் இன்று இரவு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செல்ல உள்ளார்.
இதேவேளை, தனது தந்தை சுரங்க வெல்லலகேயின் திடீர் மறைவைத் தொடர்ந்து, தேசிய கிரிக்கெட் வீரர் துனித் வெல்லலகே மற்றும் அவரது குடும்பத்தினரின் தனியுரிமையை பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் மதிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன, இதனை வலியுறுத்தியுள்ளார்.
துனித்தின் குடும்பத்தினருக்கு தேவையான தனியுரிமையை வழங்குமாறும், மிகவும் உணர்ச்சிவசப்பட்ட தனிப்பட்ட தருணத்தில் நேரடி வர்ணனை தேவையில்லை என்றும் மஹேல கோரியுள்ளார்.
முன்னதாக, ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெறும் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற நிலையில், தனது தந்தை இறந்ததை அறிந்த துனித் வெல்லலகே, இன்று காலை(19) நாடு திரும்பியமை குறிப்பிடத்தக்கது.



