ரணிலை தொடர்ந்து ஊழல் விவகாரத்தில் சிக்க போகும் நாமல்
இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழு வெளியிட்டிருந்த நாமலின் சொத்து விபரங்களில், நாமலிடம் 1.6 மில்லியன் மதிப்புள்ள தங்க நகை, 2.3 மில்லியன் மதிப்புள்ள தங்க நாணயங்கள், 3.5 மில்லியன் மதிப்புள்ள 30 தங்க வளையல்கள், 20 மில்லியன் மதிப்புள்ள தங்க இரத்தின கற்கள் பாதிக்கப்பட்ட நெக்லஸ் ,20 மில்லியன் மதிப்புள்ள இரண்டு வெள்ளை நிற நெக்லஸ், 10 மில்லியன் மதிப்புள்ள நீல நவரத்தின கற்கள் என 100 மில்லியன் சொத்துக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 10 விலைமதிப்பற்ற முத்து நெக்லஸ்கள் இருப்பதாகவும் அது அவர்களின் குலா தெய்வத்தின் நகைகள் எனவும் நாமலுக்கு பரிசாக கிடைத்த நகைகள் எனவும் நாமல் தெரிவித்துள்ளார்.
நாமலிடம் இருக்க கூடிய வணிகங்கள் அவருடைய முதலீடுகள் தொடர்பில் இந்த சொத்து மற்றும் பொறுப்புக்கூறலில் வெளிப்படையாக சொல்லப்படவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் இரு மகன்களும் தமது சொத்து விபரங்கள் தொடர்பில் இரு மாறுபட்ட கருத்துக்கள் முன்வைத்துள்ள நிலையில், நாமல் ராஜபக்ச சமர்ப்பித்த சொத்து விபரங்கள் குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இவ்வாறு நாட்டில் இடம்பெற்ற பல முக்கியமான அரசியல், சமூக, பொருளாதார செய்திகளை உள்ளடக்கிய லங்காசிறியின் விசேட செய்தி தொகுப்பு இதோ....



