முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை
முன்னாள் ஜனாதிபதிகள் தற்போது கொழும்பில் தங்களுக்கு ஏற்ற வீடுகளை கண்டுபிடிக்க கடுமையாக முயற்சித்து வருவதாக தகவகள் வெளியாகி உள்ளன.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ஏற்ற வீடுகளைக் கண்டுபிடிக்க அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களும் பணியாற்றி வருகின்றனர்.
அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வாகனங்களையும் இழந்ததால் சிலர் தங்கள் சொந்த பயன்பாட்டிற்காக வாகனங்களையும் கண்டுபிடிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொழும்பில் குடியேற பொருத்தமான வீட்டைத் தேடி வருவதாகவும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஏற்கனவே பத்தரமுல்லையில் வீடொன்றை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி தகுதி நீக்கும் சட்டமூலம்
முன்னாள் ஜனாதிபதிகளின் வீடுகள் இன்னும் முறையாக ஒப்படைக்கப்படவில்லை, மேலும் எதிர்வரும் நாட்களில் கையளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜனாதிபதி தகுதி நீக்கும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பின்னர் ஒவ்வொரு முன்னாள் ஜனாதிபதிக்கும் 95,000 ரூபாய் ஓய்வூதியம் மற்றும் பாதுகாப்பு மட்டுமே வழங்கப்படும். முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மனைவி ஹேமா பிரேமதாச தனது ஓய்வூதியத்தையும் இழந்துள்ளார்.
விதவை ஓய்வூதியம் அரசியலமைப்பின் கீழ் வழங்கப்படவில்லை, ஆனால் ஜனாதிபதி உரிமைகள் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது.
ஜனாதிபதிகளின் பாதுகாப்பு
அத்துடன் அரசாங்க மாளிகைகள் இழப்பு காரணமாக முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புப் பணியாளர்களுக்கு தங்குமிடம் வழங்குவது கடுமையான பிரச்சினையாக மாறியுள்ளது.
கோட்டாபய ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் மட்டுமே அரசாங்க வீடுகுளை பெறவில்லை, தற்போது அவர்களுக்குச் சொந்தமான வீடுகளில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



