தமிழ் தேசியக்கூட்டமைப்பு உருவாகியமைக்கான காரணத்தை வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்

Batticaloa Sri Lanka Economic Crisis Sri Lanka Sri Lankan political crisis
By Rusath Sep 28, 2022 08:13 PM GMT
Report

தமிழீழ விடுதலை போராட்டத்தின் திறப்பை, தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தங்களிடமே தந்துவிட்டதாக அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் நினைத்துக் கொண்டு இப்படியான தியாகிகள் தினங்களில் தனித்து தியாகிகள் தினங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள். இது உண்மையில் வேதனைக்குரிய விடயம். தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமல்ல என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.

தியாகி திலீபனின் 35ஆவது ஆண்டு நினைவையொட்டி மட்டக்களப்பு காந்திப்பூங்காவில், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து உரையாற்றிய அவர்,

இன்று தியாகி திலீபன் அவர்களது 35ஆவது ஆண்டு நினைவு தினம். மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்றாவது தடவையாக நினைவு கூரப்பட்டதையிட்டு உண்மையிலேயே வேதனையடையக் கூடியதாக இருக்கின்றது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பு உருவாகியமைக்கான காரணத்தை வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் | Thileepan Memorial Day Sl Political Crisis

இத்தனை இழப்புக்களுக்குப் பின்பும், இத்தனை ஆண்டுகளுக்குப் பின்பும் எங்களுக்குள் ஒரு ஒற்றுமையில்லை என்பதை நினைக்கும் போது உண்மையில் வேதனையாக இருக்கின்றது. இருந்தாலும் தியாகங்கள் என்பது பல்வகைப்பட்டது.

தமிழர்களின் உரிமை

1974ஆம் அண்டு தமிழராய்ச்சி மாநாடு நடைபெற்று பொன் சிவகுமாரன் தன்னுடைய உயிரைத்தியாகம் செய்ததிலிருந்து 2009 மே 18 வரை பல தியாகங்கள் தமிழர்களின் உரிமையைப் பெறுவதற்காக இந்த நாட்டிலே நிகழ்த்தப்பட்டிருக்கின்றது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பு உருவாகியமைக்கான காரணத்தை வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் | Thileepan Memorial Day Sl Political Crisis

அந்த வகையில் திலீபனுடைய தியாகம் முற்றிலுமாக மாறுபட்ட ஒரு தியாகமாகத்தான் நாங்கள் பார்க்கின்றோம். ஏனென்றால், போராட்டத்தில் மோதலில், குண்டு வெடிப்பில் தன்னுடைய உயிரை எம் மக்களுக்காகத் தியாகம் செய்யாமல் உண்ணா நோன்பிருந்து அஹிம்சை வழியில், காந்திய வழியில் தன்னுடைய உயிரை ஈர்த்த ஒரேயோரு நபர் என்றுதான் நாங்கள் கூறக்கூடியதாக இருக்கும். உண்மையில், அவருடைய அதே காலத்தில் விடுதலைப் போராட்டத்தில் இணைந்தவன் என்ற ரீதியில் அவருடன் ஒரே இயக்கத்தில் இணைந்து பயணிக்காவிட்டாலும் சம காலத்தில் இரு வேறு திசைகளில் பயணித்தவன் நான் என்ற வகையில் இன்று 35 வருடங்களில் முதல் முறையாக அவருக்கு அஞ்சலி செலுத்துவதில் புழகாங்கிதமடைகின்றேன்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பு உருவாகியமைக்கான காரணத்தை வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் | Thileepan Memorial Day Sl Political Crisis

அந்தவகையில், திலீபன் அவர்கள் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணா நோன்பிருந்து 12 நாட்களில் மரணத்தைத் தழுவியிருந்தார். அந்த ஐந்து கோரிக்கைகளில் மூன்று கோரிக்கைகள் 35 வருடங்கள் கடந்த போதும் நிலுவையில், கோரிக்கைகளாகவே இருக்கின்றன.

பயங்கரவாதத் தடைச்சட்டம்

பயங்கரவாதத் தடைச்சட்டம் முற்றாக அகற்றப்பட வேண்டும். இராணுவ முகாம்களிலும், சிறைகளிலுமிருக்கும் தமிழ்க் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும். மீள்குடியேற்றம் என்ற போர்வையில் வடக்குக் கிழக்கில் சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்ற ஐந்து கோரிக்கைகளில் மூன்று இன்றும் தொடர்ச்சியாகவே இருக்கிறது.

தமிழர்களின் உரிமைக் குரலாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் சக்தி இருக்க வேண்டும் என்று தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் உணர்ந்ததன் நிமிர்த்தம் 2001இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாகியது.

வடக்குக் கிழக்கில் தமழ் மக்களின் பெரும் பிரதிநிதியாக இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருந்து கொண்டிருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து இன்று ஒரு சில கட்சிகள் பிரிந்து சென்றிருந்தாலும் தனித்துவமாக நடந்து கொண்டிருந்தாலும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் திறப்பை, தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தங்களிடமே தந்துவிட்டதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கே தந்துவிட்டதாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்று கூற முடியாது.

விடுதலைப் போராட்டம்

அந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கே மணிவண்ணன் தரப்பினரும், கஜேந்திரகுமாரும் உரிமை கோருகிறார்கள். எனவே அகில இலங்கை தமிழ்க் காங்கிரசிடமே பிரபாகரன் அவர்கள் விடுதலைப் போராட்டத்தின் திறப்பைத் தந்து விட்டுச் சென்றிருப்பதாக தாங்கள் நினைத்துக் கொண்டு இப்படியான தியாகிகள் தினங்களில் தனித்து தியாகிகள் தினத்தை, இங்கு மாத்திரமல்ல, யாழ்ப்பாணத்தில் கூட செய்து கொண்டிருக்கிறார்கள்.

இது உண்மையில் வேதனைக்குரிய விடயம். தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய விடயமல்ல. நாங்கள் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த இடத்தில் திலீபன் அவர்களை நினைவு கூர்ந்தாலும் இன்றைய சூழலில் பெருமளவான மக்கள் அவரை நினைத்து அஞ்சலி செலுத்துவதற்கு மனமிருந்தாலும், இலங்கை அரசியன் புலனாய்வுப்பிரிவினரின் கெடுபிடிகளுக்குப் பயந்து, அதாவது விசாரணைகளுக்கு அழைப்பதைத் தவிர்த்துக் கொள்ளும் முகமாக இப்படியான நிகழ்வுகளை தவிர்த்துக் கொண்டு வருகிறார்கள்.

அந்த நிலை நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதனால், இன்று சற்றுக் குறைந்திருக்கிறது. இது எதிர்காலத்தில் எப்படியிருக்கும் என்று கூறமுடியாது.

கடந்த காலங்களில் திலீபன் உட்பட எமக்காக உயிர் நீத்த அத்தனை தியாகிகளையும் நினைத்து அனைவருக்குமாக பிரார்த்திப்போமாக என்றும் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Southend, United Kingdom

12 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

19 Sep, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

20 Sep, 2010
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், துன்னாலை, வல்வெட்டி, துணுக்காய், கொழும்பு, வவுனியா

20 Sep, 2015
மரண அறிவித்தல்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
கண்ணீர் அஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

17 Sep, 2000
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

28 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Kokuvil, Scarborough, Canada

16 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US