தனியார் தொலைக்காட்சி நிகழ்வில் மோதிய எம்.பிக்கள்! தாக்குதலின் பின்னணியில் உள்ள அரசியல்
நாடாளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம் மற்றும் வேலுகுமார் ஆகியோர் மோதிக்கொள்ள வேலுகுமாரின் அபாண்டமான பழிச்சொல்லே காரணம் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் விளக்கமளிப்பதற்கு இன்று (21.08.2024) ஊடகங்களை சந்தித்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
திகாம்பரத்தின் கோபம் அவரின் கோபம் மட்டுமல்ல, அது அப்பாவி மக்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் கோபம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சஜித் அணி
அத்துடன், திகாம்பரம் பயன்படுத்திய 'பார் குமார்' என்ற வார்த்தையை பலமுறை ஊடகங்களும் பயன்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, குறித்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசாவின் அணியை பிரதிநிதித்துவப்படுத்தி திகாம்பரம் மட்டுமே கலந்துக் கொண்டிருந்ததாக ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Super Singer: தொகுப்பாளினி பிரியங்காவின் மானத்தை காப்பாற்றிய சிறுமி... பிரமிப்பில் நடுவர்கள் Manithan

தமிழகத்தில் தாறுமாறு வசூல் வேட்டை செய்துள்ள அஜித்தின் குட் பேட் அக்லி.. எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam

அடேங்கப்பா முதல் நாளில் உலகம் முழுவதும் மாஸ் வசூல் வேட்டை செய்த அஜித்தின் குட் பேட் அக்லி... Cineulagam
