யாழில் தாய் மற்றும் மகன் மீது சரமாரி தாக்குதல்: பெருந்தொகை பணம் கொள்ளை
யாழ்ப்பாண-நாவற்குழி பகுதியில் இன்று பகல் பொழுதில் வீடொன்றுக்குள் புகுந்து பணம் மற்றும் வீட்டிலிருந்த பொருட்கள் என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
கொள்ளை சம்பவம்

இதன்போது திருடர்கள் வீட்டிலிருந்த தாய் மற்றும் மகனை கட்டிவைத்து தாக்கிவிட்டு வீட்டிலிருந்த பொருட்கள் மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர் என சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொள்ளையர்களின் தாக்குதலில் 17 வயதான மகனின் கை முறிந்துள்ளதுடன், 42 வயதான தாயின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலதிக சிகிச்சை

காயமடைந்த தாயும் மகனும், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்.
குடும்பத் தலைவரை இழந்த அந்த குடும்பம் வறுமை நிலையில் தமது வாழ்வை கொண்டு நடத்திய நிலையிலையே இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் 3 நாட்களில் குரு பெயர்ச்சி - இன்னும் 4 மாதங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் Manithan
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam
குணசேகரன் போடும் மாஸ்டர் பிளான், ஜனனி சமாளிப்பாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam