யாழில் வீடு புகுந்து தங்க ஆபரணத்துடன் பித்தளை நகையையும் திருடிச் சென்ற திருடர்கள்!
வட்டுக்கோட்டை-சங்கரத்தை சின்னம்மா வித்தியாலயத்திற்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில் திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவமானது நேற்றுமுன்தினம்(26.5.2026) இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், வீட்டில் உள்ளவர்கள் மகளை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காக நேற்றுமுன்தினம் காலை வீட்டிலிருந்து கொழும்பிற்கு சென்றுள்ளனர்.
பொலிஸார் விசாரணை
இதன்போது வீட்டை உடைத்து உள்ளே சென்ற திருடர்கள் மிளகாய் தூள், சரக்குத்தூள், பயிற்றம் உருண்டைகள், மூன்று கோழிகள், கால் பவுண் தோடு, ஒரு மூக்குத்தி, ஒரு தொகை பணம் மற்றும் பித்தளை அட்டியல் போன்றவற்றை திருடிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் கொழுப்பு சென்றவர்கள் நேற்று மாலை வீட்டிற்கு வந்து பார்த்தவேளை வீடு உடைக்கப்பட்டு மேற்படி பொருட்கள் களவாடப்பட்டு இருந்ததை அவதானித்தனர்.
இந்நிலையில் இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
you may like this


ஆபத்தில் சிக்கிய குணசேகரன், விசாலாட்சி பேச்சால் குழப்பத்தில் ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஐரோப்பாவுக்கு கடும் பின்னடைவு... மிகப்பெரிய திட்டமொன்றைக் கைவிட்ட ஜேர்மனியும் பிரான்சும் News Lankasri