பொலிஸ் அதிகாரியின் காதை கடித்து தப்பிக்க முயன்ற திருடன்
அனுராதபுரத்தில் யாத்ரீகர்களிடமிருந்து பணம் மற்றும் நகைகளைத் திருடியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் பொலிஸ் அதிகாரியின் காதை கடித்து தப்பிக்க முயன்றுள்ளார்.
இந்நிலையில் காயமடைந்த குறித்த அதிகாரி அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உடமலுவ பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் துணை ஆய்வாளர் (SI) ருவன்வெலிசேயவிலிருந்து ஸ்ரீ மகா போதிக்கு செல்லும் பாதையில் பணியில் ஈடுபட்டிருந்தபோது சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சந்தேகநபர் கைது
இந்நிலையில் சந்தேகநபரை பொலிஸ் அதிகாரி கைது செய்ய முயன்றபோது, அவர் அவரது காது மடலின் ஒரு பகுதியைக் கடித்ததாக கூறப்படுகிறது.
இருப்பினும், சம்பவ இடத்திற்கு விரைந்த மற்றொரு அதிகாரியின் உதவியுடன், சந்தேக நபரைக் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி, அனுராதபுரம் தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தர்ஷன் திருமணத்தை முடித்த ஜனனி-சக்தி எடுத்த அடுத்த அதிரடி முடிவு... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam

TRP-வில் புதிய உச்சத்தை தொட்ட எதிர்நீச்சல் சீரியல்.. இதுவரை இவ்வளவு ரேட்டிங் வந்ததே இல்லை Cineulagam
