ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வீட்டில் பணம் கொள்ளை!
தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும், களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நிஹால் அபேசிங்கவின் வீடு உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த திருட்டு சம்பவம் இன்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதன்போது அங்கிருந்த ஒருதொகை பணம் களவாடப்பட்டுள்ளதாக ஹொரணை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளர்.
குற்றப் புலனாய்வு விசாரணை
நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டார் வெளியில் சென்று அதிகாலை 03 மணியளவில் வீடு திரும்பியபோது அறையில் உள்ள அலுமாரியின் துணிகள் இழுக்கப்பட்டு இருந்ததாக பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போதே அலுமாரியில் இருந்த பணம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில், ஹொரணை தலைமையக பொலிஸார் மற்றும், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
அடுத்த பிளானில் அறிவுக்கரசி, அழுது புலம்பும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri