திருடர்களை பிடிக்க சட்டம் கொண்டு வரும் போது வேண்டாம் என்கின்றனர்-ஜனாதிபதி
திருடர்களை பாதுகாப்பதாக தன் மீது குற்றம் சுமத்தும் நபர்கள், திருடர்களை பிடிப்பதற்கு சட்டத்தை கொண்டு வரும் போது அதனையும் செய்ய வேண்டாம் எனக் கூறுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நான் திருடர்களை பாதுகாப்பதாக குற்றம் சுமத்துகின்றனர்
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். தேர்தல் செலவுகளை ஒழுங்குப்படுத்த சட்டமூலத்தை கொண்டு வந்து அதனை சமர்ப்பிக்கும் போது, தேர்தலை பாதிக்காத வகையில் அதனை சமர்ப்பிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஒரே துறை தொடர்பில் இரண்டு சட்டமூலங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் உள்ள பிரச்சினைகளை இந்த வாரத்தில் தீர்த்துக்கொள்ள முடியும். அதில் பிரச்சினையில்லை. தேர்தல் செலவுகளை ஒழுங்குப்படுத்தும் சட்டமூலத்தை கொண்டு வருவோம்.
தேர்தலை பாதிக்காத வகையில் அதனை கொண்டு வருமாறு நாடாளுமன்றத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. திருடர்களை பாதுகாப்பதாக கூறி என்னை திட்டுகின்றனர்.
திருடர்களை பிடிக்க சட்டத்தை கொண்டு வரும் போது அதனையும் வேண்டாம் என்கின்றனர் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 16 மணி நேரம் முன்

பாலஸ்தீனத்திற்கு தனி நாடு அங்கீகாரம்: பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் இன்று முக்கிய அறிவிப்பு News Lankasri
