விடுதலைப் புலிகளின் தலைவர் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா? ஆதங்கப்படும் தென்னிலங்கை அரசியல்வாதி
இலங்கையில் வடக்கில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இருந்திருந்தால், நாட்டின் வளங்கள் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டிருக்க மாட்டாது என எங்கள் மக்கள் சக்தி கட்சியின் தலைவர் டேன் பியசாத்(Dan Piyasath) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.
“வடக்கில் பிரபாகரன் இருந்திருந்தால், கட்டாயம் திருகோணமைலை துறைமுகங்களுக்குரியவை விற்பனை செய்யப்பட்டிருக்க மாட்டாது. சீனா, இலங்கைக்கு வந்து துறைமுக நகரத்தை நிர்மாணித்திருக்காது. இந்தியா துறைமுகங்களை கொள்வனவு செய்யவும் வந்திருக்காது என்று எமக்கு உண்மையில் எண்ண தோன்றுகிறது.
பிரபாகரன் இருந்திருந்தால், உண்மையில் இவை நடந்திருக்காது. வெளிநாட்டவர்களுக்கு நாட்டின் வளங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. துண்டு துண்டுகளாக விற்பனை செய்கின்றனர். நாடு மிகவும் பயங்கரமான நிலைமைக்கு சென்றுள்ளது.
சீனா, இலங்கைக்கு வந்திருப்பது இந்தியாவின் இரகசியங்களை தேட என இந்தியா கூறுகிறது. எதிர்காலத்தில் இலங்கை மிகப் பெரிய போர் களமாக மாறும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. இவ்வாறு சீனாவும், இந்தியாவும் மோதிக்கொண்டால், எமது நாட்டு மக்களே இழப்பீடுகளை செலுத்த நேரிடும்.
அமெரிக்காவுக்கு நாட்டின் வளங்களை விற்பனை செய்யும் போது, அமெரிக்காவை கடுமையாக எதிர்த்த தற்போதைய அரசாங்கத்தில் இருக்கும் விமல் வீரவங்ச, உதய கம்மன்பில, சீதா அரம்போல ஆகியோர் தற்போது அமைதியாக இருக்கின்றனர்” எனவும் டேன் பியசாத் குறிப்பிட்டுள்ளார்.
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam