இலங்கையில் தாயின் ஆதரவுடன் பிக்குவின் மோசமான செயல் - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
புதிய இணைப்பு
சிறுமி ஒருவரை தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரதன தேரர், வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
சிறுமி ஒருவரை தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் பல்லேகம ஹேமரத்ன தேரர் நேற்றிரவு சுமார் 11.45 மணியளவில் நிட்டம்புவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சந்தேகநபர் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டு இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
இக்குற்றங்களுக்கு உடந்தையாக இருந்தமையினாலும் சிறுமியை பணத்திற்காக விற்பனை செய்த குற்றச்சாட்டிலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் நேற்று கைது செய்யப்பட்டு, 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் காவல்
மேலும், அவரது காதலர்கள் என்று கூறப்படும் ஒரு நடத்துனர் மற்றும் ஒரு வியாபாரியும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தேரரின் கைது தாமதமானதை தொடர்ந்து அனுராதபுர பிரதம நீதவான் சசிந்து விக்ரமரத்னவினால் நேற்று பிறப்பிக்கப்பட்ட பிடியாணையின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சான்றுகள் மற்றும் மனுக்களின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சந்தேகநபர்களுக்கு பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாகவும், சிறுமியைப் பணத்திற்காக விற்றதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
மருத்துவ பரிசோதனை
நிட்டம்புவ பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் சிறுமி காதலனுடன் தங்கியிருந்த போது, கடந்த 27ஆம் திகதி பொலிஸ் காவலில் எடுக்கப்பட்ட நிலையில், இந்த சீண்டல் சம்பவம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து கம்பஹா பொது மருத்துவமனையில் உள்ள சிறப்பு நீதித்துறை மருத்துவரிடம் கொண்டு செல்லப்பட்டு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளில் அவர் பலமுறை தகாத செயற்பாட்டுக்கு உள்ளாக்கப்பட்டதை பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளன.
அனுராதபுரம் விகாரை ஒன்றின் பொறுப்பாளரால் தான் முதலில் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், பின்னர் தனது காதலன் மற்றும் மைத்துனரால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாகவும் சிறுமி தெரிவித்துள்ளார்.
பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கபில சந்திரசேனவின் திடீர் மரணம்! CCD பிரிவிற்கு அவசரமாக மாற்றப்பட்ட விசாரணைகள்