நாட்டில் நிச்சயம் உணவுத்தட்டுப்பாடு ஏற்படுமா? - பேராசிரியர் புத்தி மாரம்பே எச்சரிக்கை
நாட்டில் நிச்சயம் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விவசாய பீட பேராசிரியர் புத்தி மாரம்பே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெரும்போகத்தில் வழமையான அறுவடையிலும் மூன்றில் இரண்டு பங்குகளே கிடைக்கப் பெறும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிடைக்கப்பெறும் அறுவடையில் 25 வீதமானவற்றை விவசாயிகள் சொந்த நுகர்விற்காக களஞ்சியப்படுத்திக் கொள்வர் என அவர் தெரிவித்துள்ளார்.
பற்றாக்குறையாகும் உணவுப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கு டொலர் பிரச்சினை காணப்படுவதனால் நிலைமை மோசமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விவசாயிகளுக்கு மிகவும் அத்தியாவசியமாகத் தேவைப்படும் உர வகைகள் வழங்கப்படாமையினால் உணவு உற்பத்தியில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் விவசாய உற்பத்தி 30 முதல் 35 வீதம் வரையில் குறைந்தால் அது பாரிய பிரச்சினையாக உருவாகும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



