முஸ்லிம் தாதியர்களுக்கான உடை மாற்றம்.. அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்!
தாதியர்களின் சீருடையில் எவ்வித உத்தியோகப்பூர்வ மாற்றமும் செய்யப்படவில்லை என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
முஸ்லிம் தாதியர்களின் உடை தொடர்பான சமீபத்திய விவாதங்களைத் தொடர்ந்து அமைச்சு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
பரிந்துரைகள்..
முஸ்லிம் தாதியர்களின் தற்போதைய ஆடையை மாற்றுவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சுகளிடமிருந்து எந்தவொரு முறையான பரிந்துரைகளையும் அமைச்சு பெறவில்லை என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன கூறியுள்ளார்.

சம்பந்தப்பட்ட அமைச்சுகள் எங்களுக்கு ஒரு பரிந்துரையை வழங்கினால், நாங்கள் அதைப் பரிசீலித்து தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்.
இந்த மாற்றம் அவசியம் என்று அவர்களிடமிருந்து ஒரு பரிந்துரை இருக்க வேண்டும். அத்தகைய பரிந்துரை இன்னும் பெறப்படவில்லை, என்று அவர் கூறினார்.
 
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    சீனாவில் இருந்து அரிய பூமி கனிமங்களை இறக்குமதி செய்ய உரிமம் பெற்றுள்ள இந்திய நிறுவனங்கள் News Lankasri
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        