நாளை முதல் பேருந்துகள் இல்லை
டீசல் தட்டுப்பாடு காரணமாக நாளை (07) முதல் பஸ்களை இயக்க முடியாது எனவும் எதிர்வரும் ஐந்து நாட்களுக்கு இந்நிலை தொடரும் எனவும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் (05) பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசல் விநியோகிக்கப்படவில்லை எனவும் இதனால் நாளைய தினம் பெரும்பாலான பேருந்துகளை இயக்க முடியாது எனவும் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று (06) நடத்தப்படும் ஹர்த்தாலுக்கு ஆதரவாக நேற்று (05) நண்பகல் 12.00 மணி முதல் இன்று நள்ளிரவு 12.00 மணி வரை பேருந்து சேவையை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தற்போதைய எரிபொருள் தட்டுப்பாடு இம்மாதம் 12ஆம் திகதி வரை தொடரும் என CPC அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்தும் டீசல் தட்டுப்பாடு நிலவி வருவதால், பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கு டீசல் வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு போக்குவரத்து அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படாததால், பேருந்துகளுக்கு தேவையான எரிபொருளை உரிய முறையில் பெற்றுக்கொள்ள முடியவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பதினாறாவது மே பதினெட்டு 5 மணி நேரம் முன்

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சரிகமப L'il Champs வின்னர் திவினேஷ் தனது தந்தைக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு.. இதோ பாருங்க Cineulagam

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri
