ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆபத்தில்லை : மஹிந்த தேசப்பிரிய
ஐக்கிய மக்கள் சக்தி அரசியல் கட்சியாக செயற்படுவதில் எதுவித ஆபத்தும் இல்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய(Mahinda Deshapriya) தெரிவித்துள்ளார்.
இலங்கை பிரஜை அல்லாத ஒருவர் அரசியல் கட்சியொன்றின் செயலாளராக இருக்கும் நிலையில் அது தொடர்பான சட்ட நிலை தொடர்பில் வினவப்பட்ட போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழு
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், அரசியல் கட்சியொன்றின் முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்படுகின்றவர்கள் இலங்கைப் பிரஜைகள் தானா என்பதை பரிசோதிக்கும் தேவையொன்று இதுவரை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு ஏற்பட்டதில்லை.
அவ்வாறு ஒரு அரசியல் கட்சியின் செயலாளராக இலங்கைப் பிரஜை ஒருவரே இருக்க வேண்டும் என்றும் எதுவித சட்டமும் இல்லை.
அவ்வாறான பின்புலத்தில் டயானா கமகே , பொதுச் செயலாளர் பதவியை வகித்த காரணத்துக்காக ஐக்கிய மக்கள் சக்தியை தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்றுக் கொள்வதில் எதுவித சிக்கல்களும் இல்லை என்றும் மஹிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |