பொலிஸ் ஊரடங்கு என்று ஒன்றில்லை - ஹிருணிகா அவசர அழைப்பு
பொலிஸ் ஊரடங்கு என்று ஒன்றில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். தனது சமூக வலைதள பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இதனை கூறியுள்ளார்.
அதில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு உத்தரவானது சட்டவிரோதமான ஒன்றாகும். நாளைய போராட்டத்தை சிதைக்கும் நோக்கிலேயே இந்த ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
நாளைய நாள் நாட்டை மீட்பதற்கான நாளாகும். ஆகையினால் நாம் அனைவரும் ஒன்று சேர வேண்டும். ஆட்சியாளர் எங்களை கட்டு அச்சமடைந்துள்ளார்.
நீங்கள் வரும் உங்களை எந்தவொரு பொலிஸ் அதிகாரியும் சோதனை செய்தால் அவரது சீருடையில் இருக்கும் இலக்கம் மற்றும் குறித்த அதிகாரிகை புகைப்படம் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். வெளியில் செல்ல வேண்டாம் என்பதற்கான காரணத்தை அவர்களிடம் கேளுங்கள்.
ஆட்சியாளர் எங்களை கட்டு பயம் கொண்டுள்ளார்
பொலிஸ் ஊரடங்கு என்று ஒன்றில்லை. நாளைய போராட்டத்தை குழப்புவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒன்று. ஆகையினால் யாரும் வெளியில் வர அச்சமடைய வேண்டாம். நாங்கள் நாளை அரசுக்கு எதிராக ஒன்று கூடுவோம் என முடிவு செய்துள்ளோம்.
ஆட்சியாளர் எங்களை கட்டு பயம் கொண்டுள்ளார். என் வாழ் நாளில் இப்படி பயந்த ஒருவரை பற்றி நாள் கேள்விப்பட்டது கூட கிடையாது. ஆட்சியாளர் எங்களுக்கு பயந்துவிட்டார். நாட்டு மக்களுக்கு பயந்துவிட்டார்.
நாளைய நாள் தான் இறுதி நாளாகும். ஆகையினால் நாளைய தினம் அனைவரும் அரசுக்கு எதிராக ஒன்று கூடுங்கள். யாரை கண்டும் அச்சமடைய வேண்டியதில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.