நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடா? அமைச்சர் வெளியிட்டுள்ள விடயம்
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு கிடையாது. எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான நிதி அரசாங்கத்திடம் இருக்கிறது. எனவே எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என்று சந்தேகம் கொள்ளவோ அல்லது வீண் அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ளவோ தேவையில்லை என்று அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண(Ramesh Pathirana) தெரிவித்துள்ளார்.
வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்றைய தினம் இடம்பெற்றபோது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், ”எதிர்வரும் காலங்களில் சுற்றுலாத்துறையை மீள ஆரம்பித்து அதன் மூலம் அந்நிய செலாவணி கிடைக்கப் பெறும் என்று நம்புகின்றோம். நாட்டை வழமைக்கு கொண்டு வருவதன் மூலம் நாட்டுக்கு கிடைக்கப் பெறுகின்ற முதலீடுகள் உள்ளிட்ட காரணிகளால் இந்த நெருக்கடிகளுக்கு தீர்வு காண முடியும் என்று எதிர்பார்க்கின்றோம்” என்று குறிப்பிட்டார்.
ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
இறந்த அமுதா, அதிரடியாக கைதான ஜனனி, அடுத்து நடந்த எதிர்ப்பார்க்காத விஷயம்.... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு கதைக்களம் Cineulagam