சித்தார்த்தன் தவிர்க்கப்பட்ட விடயத்தில் இனவாதம் இல்லை! கம்மன்பில விளக்கம்
அரசியலமைப்பு பேரவைக்கு எதிர்க்கட்சியின் சார்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனின் பெயர் பரிந்துரைக்கப்பட்ட போது அது, தவிர்க்கப்பட்டமையானது, இனவாத அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது அல்ல என்று நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று இந்த கருத்தை அவர் வெளியிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தனின் பெயர், எதிர்க்கட்சி, தரப்பில் தவிர்க்கப்பட்டமை இனப்புறக்கணிப்பு என்ற அடிப்படையிலும் சிங்களவர்களின் பெரும்பான்மைவாதம் என்ற அடிப்படையில், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு, நேற்று கருத்து வெளியிட்டதாக தெரிவித்தே, உதய கம்மன்பில தமது கருத்தை வெளியிட்டார்.
இனவாதம்
அதிகாரப்பரவலாக்கத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் வெளியிட்டுள்ளார் என்ற அடிப்படையில், தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு பாதீட்டுக்கான வாக்கெடுப்பின்போது, அதனை தவிர்த்தது. இது ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்றாகும்.
இந்தநிலையில் அவர்களின் பெயர் அரசியல் அமைப்பு பேரவைக்கு
பரிந்துரைக்கப்பட்டால், அவர்கள் அந்த பேரவையையும் அதிகாரப்பரவலாக்கல்
விடயத்துக்கு பயன்படுத்திக்கொள்வார்கள் என்பதற்காகவே, சித்தார்த்தனின் பெயர்
பரிந்துரைக்கப்பட்டபோது, சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, அதற்கு
எதிராக தமது பெயரை பரிந்துரைத்தது என்று உதய கம்மன்பில குறிப்பிட்டார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

Brain Teaser Challenge: மனதை குழப்பும் புதிர்- 7 வினாடியில் திருடனின் மனைவியை கண்டுபிடிக்க முடியுமா? Manithan

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri
