கிழக்கு மாகாணத்தில் சீனர்களுக்கு இடம் இல்லை - அனுராதா யஹம்பத்
கிழக்கு மாகாணத்தில் சீனர்களுக்கு இடம் இல்லை என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார்.
இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் நான் விசேடமாக அவதானம் செலுத்தி வருகின்றேன் கிழக்கு மாகாணத்தில் இருக்கிற அனைத்து இடங்களிலும் விவசாயிகள் மீனவர்கள் பாமர மக்கள் அவர்களுடைய பொருளாதாரத்தை வளர்த்து அவர்களை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு செல்வதே எனது நோக்கமாக செயற்பட்டுக் கொண்டு வருகின்றேன்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள விவசாயிகளும் மீனவர்களும் இல்லை சாதாரண பாமர மக்களும் தங்களது கால்களில் நிற்கும் ஒரு நிலை உருவாகுமாக இருந்தால் சீனர்கள் இல்லை எந்த நாட்டவரும் இங்கே வந்து தொழில் செய்ய வேண்டிய தேவைப்பாடு கிடையாது .
ஆகவே எமது மாகாணத்தில் சாதாரண மக்களது வாழ்வாதாரத்தை உயர்த்துவது தான் எனது நோக்கம்.
கிழக்கு மாகாணத்தை பொறுத்த வரையில் சீனர்களை பற்றி பயப்பட எதுவுமே இல்லை என தெரிவித்துள்ளார்.





ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam

போலியான திருமணம்... நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நபர் பிரித்தானியாவில் குடும்ப விசாவிற்கு விண்ணப்பம் News Lankasri

ஜெயிலர் 2 இன்னும் ரிலீஸ் ஆகல.. அதுக்குள்ள ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு! என்ன தெரியுமா Cineulagam

டிரம்புக்கு வயது 79 இல்லை…வெறும் 65 வயது தான்! மருத்துவ அறிக்கை வெளியிட்ட வெள்ளை மாளிகை News Lankasri
