விலை அதிகரிப்பை தவிர வேறு வழி இல்லை! - மொட்டுவின் பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ள தகவல்
"வயிற்றை பற்றி சிந்திக்கும் போது நாட்டை பற்றியும் சிந்திக்க வேண்டும், இல்லையேல் எதிர்காலத்தில் எமது சந்ததியினர் எங்கள் மீது, நாட்டைப் பற்றி சிந்திக்கவில்லை என்று சாபமிட நேரிடும் என அரசின் பிரதான கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் (Sagara Kariyawasam) தெரிவித்துள்ளார்.
பொருட்களின் விலையேற்றம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துக் கூறும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
"நாட்டு மக்கள் சுதந்திரம் கிடைத்தது முதல் 70 ஆண்டுகளாக தங்களின் வயிற்றை நிரப்பிக் கொள்வது தொடர்பாக சிந்தித்தனரே தவிர, நாட்டைப் பற்றி சிந்திக்கவில்லை.
உலகளாவிய ரீதியில் நிலவும் கோவிட் தொற்றுப் பரவல் நிலைமையால், நாட்டில் பொருட்கள் சேவைகளின் விலைகள் உயர்வடையும் நிலை உருவாகியுள்ளது.
இந்த நேரத்தில் இவ்வாறு விலை அதிகரிப்பதைத் தவிர வேறு வழிகள் கிடையாது.
உலக அளவில் பொருட்களின் விலைகள் உயர்வடையும் போது இந்த நாட்டில் மாத்திரம் சட்டங்களைப் போட்டு அவற்றைக் கட்டுப்படுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அரைகுறை கவர்ச்சி உடையில் வலம்வந்த சீரியல் நடிகை தர்ஷனா... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
27வது திருமண நாள் நெருங்கும் நிலையில் விவாகரத்து வழக்கு வாபஸ்! விஜய்யுடன் மீண்டும் இணைவாரா? Manithan
இதெல்லாம் வெறும் ட்ராமா! மோகன் சர்மா முதியோர் இல்ல நாடகம் குறித்து குட்டி பத்மினி பரபரப்பு பேட்டி Manithan