பதவி விலகுவதை தவிற வேறு வழியில்லை - ஜனாதிபதி, பிரதமரிடம் சஜித் கோரிக்கை
ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கம் உடனடியாக இராஜினாமா செய்வதைத் தவிர வேறு வழியில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தினால் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
தலைமைத்துவத்தை வழங்க தயார்
"இன்று மனித உயிர்கள் ஆபத்தில் உள்ளன. நாட்டை அழித்து இந்த நாட்டு மக்களை அழிக்கும் இந்த கொடூர ராஜபக்ச ஆட்சியை அகற்ற வேண்டும். உடனடியாக பதவி விலகுமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கிறோம்.
இந்த நாட்டின் அனைத்து முற்போக்கு அரசியல் சக்திகளுடனும் கைகோர்த்து இந்த பயணத்தை செயல்படுத்த தயாராக இருக்கிறோம்.அதற்கு தலைமைத்துவத்தை வழங்க தயாராக உள்ளோம்.
எனவே நாட்டை சீரழிக்கும் இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் மக்கள் போராட்டத்தில் இந்த நாட்டிலுள்ள அனைவரும் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





இந்தியாவிற்கு கலக்கம் தரும் தகவல்... நெருங்கிய நண்பரிடமிருந்து மிகவும் மேம்பட்ட ஆயுதம் வாங்கிய பாகிஸ்தான் News Lankasri

டிரம்ப் தோற்கவில்லை.,ஆனால் இது புடினின் தெளிவான வெற்றி…! அமெரிக்க அதிகாரிகளின் சர்ச்சை கருத்து News Lankasri
