மக்கள் ஒன்று கூடினால் வைரஸ் வேகமாக பரவும் அபாயம் இருக்கின்றது
நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் எதிர்வரும் ஜனவரி மாதம் நிறைவடையும் வரை சிவனொளிபாத மலைக்கு வருவதை தவிர்த்துக்கொள்ளுமாறு நுவரெலியா மாவட்ட செயலாளர் எம்.பி.ஆர். புஷ்பகுமார கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 400 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் மக்கள் ஒன்று கூடினால் வைரஸ் வேகமாக பரவும் அபாயம் இருக்கின்றது.
நெருக்கடி நிலைமை தொடர்பில் சுகாதார தரப்புடன் ஆலோசனை நடத்தினோம். இதன்பிரகாரம் ஜனவரி மாதம் நிறைவடையும் வரை சிவனொளிபாத மலைக்கு யாத்திரை வரவேண்டாம் என பக்த அடியார்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.
சிவனொளிபாதமலை மூடப்படவில்லை. ஆனாலும் ஜனவரி மாதம் இறுதிவரை நிலைமைகள் அவதானிக்கப்பட்டு, வழிபாடுகளுக்காக பக்த அடியார்களை அனுமதிப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும். தற்போதைய நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்தால், சுகாதார நடைமுறைகள் மற்றும் சில கட்டுப்பாடுகளுடன் பெப்ரவரி மாதம் முதல் சிவனொளிபாத மலைக்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam