குச்சவெளி பிரதேச சபையில் குழப்பம்
குச்சவெளி பிரதேச சபை நேற்றைய (31.12.2025)அமர்வின் போது அமளிதுமளி ஏற்பட்டுள்ளது.
குச்சவெளி திரியாய் தமிழ் பாடசாலைக்கு இரண்டு குப்பை தொட்டிகளை வழங்குமாறு கேட்ட தமிழரசு கட்சி பிரதேச சபை உறுப்பினருக்கு அதனை வழங்க மறுத்ததுடன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரிடம் என்னை காட்டி கொடுத்தது நீதான் என்று திட்டி தீர்த்த சம்பவம் ஒன்றே குச்சவெளி பிரதேச சபை அமர்வில் பதிவாகியுள்ளது.

குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் குறித்த சபை உறுப்பினர் தனுசனை இவ்வாறு திட்டியதாகவும் ஆயுதம் வைத்துள்ளாய் என்றும் தன்னை கொலை செய்வதற்கு முயற்சிக்கின்றாய் என்று பொய்க் குற்றம் சாட்டி பிரேத சபை உறுப்பினரை சபையில் இருந்து வெளியேற்றுவதற்கு சபையில் தீர்மானமும் கொண்டுவரப்பட்டது.
இது சபை அமர்வின் போது அமளிதுமளியாக மாறியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் நடந்த சோகம்! இதுவரை 40 பேர் பலி என தகவல்- 100 பேர் படுகாயம்..
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |