ராஜபக்சக்களுக்கான மக்கள் ஆதரவில் சரிவு! - ஒப்புகொண்டார் நாமல்
ராஜபக்சக்களுக்கு இதுவரை காலம் காணப்பட்ட மக்கள் ஆதரவில் சரிவு ஏற்பட்டுள்ளது என்பதனை ஒப்புக்கொள்வதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஆங்கில பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில், எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எந்தவொரு அரசியல்வாதிக்குமான மக்கள் செல்வாக்கு எல்லா காலங்களில் உச்சத்திலேயே இருப்பதில்லை என்பதனை புரிந்து கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார். தலைவர்களின் மக்கள் செல்வாக்கு தளம்பும் நிலையுடையது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ராஜபக்சக்கள் எப்போதும் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியலில் ஈடுபட்டவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். திடீரென இரசாயன உரப் பயன்பாட்டை ரத்து செய்து, சேதன உரப் பயன்பாட்டுக்கு மாறிய தீர்மானம் மக்கள் ஆதரவில் தாக்கம் செலுத்தியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராஜபக்சக்களுக்கு காணப்படும் மக்கள் செல்வாக்கில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதனை தாம் ஒப்புக்கொள்வதாகவும் இது தற்காலிகமானது எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
51 ஆண்டுகளுக்கு பின் நிறைவேறிய உலக கோப்பை கால்பந்து கனவு: இருந்தும் ஹைதி ரசிகர்கள் சோகம் News Lankasri