முல்லைத்தீவில் விஹாரைகளுக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு
முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணத்தில் காணப்படும் விஹாரைகளுக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசாநாயக்க தெரிவித்துள்ளார்.
குறித்த விஹாரைகளுக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
எமது மக்கள் முல்லைத்தீவு விகாரைக்கு செல்ல ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதை செய்ய முடியாது எனவும் வடக்கிற்கு ஒரு நீதியும் தெற்கிற்கு ஒரு நீதியும் இருக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாமல் ராஜபக்சவை கைது செய்யும் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஏனைய தரப்புக்கள் மகிழ்ச்சி அடையும் என தெரிவித்துள்ளார்.
எனினும் தங்களால் அவ்வாறு மகிழ்ச்சி அடைய முடியாது என தெரிவித்துள்ளார்.
ராணுவத்தைச் சேர்ந்த படை வீரர்கள் காதலிக்காது, திருமணம் செய்து கொள்ளாது 17 18 வயதிலேயே ராணுவத்தில் இணைந்து உயிர்த்தியாக்கம் செய்து இந்த நாட்டை பாதுகாத்தனர் என தெரிவித்துள்ளார்.
சில ராணுவ படை வீரர்கள் முதல் முறை விடுமுறையை கூட பெற்றுக் கொண்டு வீடு திரும்ப முடியாது உயிரிழந்திருக்கிறார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடகிழ் சிங்கள மக்கள் செல்வதனால் வடக்கு மக்களே பயனடைகின்றார்கள் என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
ஒரே நாட்டில் இரண்டு விதமான சட்டங்கள் இருக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டி உள்ளார். ஒவ்வொரு புலம்பெயர் அமைப்புகளுக்கு தேவையான வகையில் இந்த நாட்டை ஆட்சி செய்ய இடம் அளிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
படைவீரர்கள் உயிர் தியாகம் செய்து இந்த நாட்டை பாதுகாத்தனர் எனவும் எனவே அவ்வாறான ஓர் பின்னணியில் நாட்டை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் சாமர சம்பத் தசாநாயக்க தெரிவித்துள்ளார்.