ஒட்டமாவடியில் இன்னும் 700 உடல்கள் மட்டமே அடக்கம் செய்ய இடமுண்டு - ஏ.எம் நௌபர்

Covid-19 Batticaloa Covid death Oddamavadi
By Independent Writer Aug 03, 2021 07:44 PM GMT
Report

மட்டக்களப்பு - ஒட்டமாவடி சூடுபத்தினசேனையில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்கள் மற்றும் உடல்கள் இனி அடக்கம் செய்ய இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதுடன், இன்னும் 700 உடல்கள் மட்டுமே அடக்கம் செய்யக்கூடிய இடம் மட்டுமே உள்ளது என ஒட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம் நௌபர் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று(03) இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்கள் மற்றும் உடல்களை அடக்கம் செய்ய அடையாளப்படுத்தப்பட்ட ஒரே ஒரு இடம் ஒட்டமாவடி பிரதேச சபை எல்லைக்குள் உள்ள பகுதியான மஜீமா நகர் சூடுபத்தினசேனை பகுதியாகும்.

இந்த பொது மயானத்திலே உடலங்கள் நல்லடக்கம் செய்யப்பட்டு வருகின்றன. இதனை எமது சபை பெறுபேற்று மனித வலு, இயந்திர வலு என்பவற்றைப் பயன்படுத்தி மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.

இதற்கு இராணுவத்தினர், சுகாதார பணியாளர்கள், ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் இந்த உடல்களை அடக்கம் செய்வதற்கு 3 ஏக்கர் காணியை அடையாளப்படுத்தி அதில் உடல்கள் அடக்கம் செய்துவந்த நிலையில், இந்த காணி போதாது என அதனுடன் இணைந்த மேலும் இரண்டு ஏக்கர் காணியை அடையாளப்படுத்தி 5 ஏக்கர் காணியில் அனைத்து சமூகங்களுடைய உடல்கள் அடக்கம் செய்து வருகின்றோம்.

இதுவரையில் 1279 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், இந்த 5 ஏக்கர் காணியிலே இன்னும் சுமார் 700 உடல்கள் மட்டுமே அடக்கம் செய்யமுடியும். இருந்தபோதும் தற்போது கோவிட்டின் தாக்கம் அதிகரித்துள்ளதால் நாளாந்தம் 25 அல்லது 30 உடல்கள் நாடளாவிய ரீதியிலிருந்து வருகின்றதன் காரணமாக இன்னும் ஒரு வாரத்தில் இந்த இடம் முடிந்துவிடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்த இடம் தொடர்பாகக் கடந்த 29ம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிபர் கவனத்திற்குக் கொண்டுவந்தேன்.

எனவே நாட்டில் கோவிட்டினால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய வேறு எங்கும் ஒழுங்கு செய்யப்படாத நிலையிலே இந்த ஒட்டமாவடி பிரதேசத்தில் மட்டும் அடையாளப்படுத்தப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்பட்டுவரும் நிலையில் இது முடிவுறும் போது இந்த இடத்தில் மேலும் இடத்தை பெற்றுக்கொள்ள முடியாது சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே மாற்று இடத்துக்கு எங்கு செல்வது என்ற கேள்வி எழுந்துள்ளது. இது நாட்டில் வாழுகின்ற எல்லோரதும் பொதுவான பிரச்சனை.

எனவே இந்த இடம் முடிவுறுகின்ற போது மாற்று இடத்தை எல்லோருமாகச் சேர்ந்து பெறவேண்டிய பொறுப்பு இருக்கின்றது .

நாட்டிலே எந்த பாகத்திலிருந்தாலும் தேடி அதனை அடையாளப்படுத்திப் பெற்றுக் கொள்ள வேண்டிய பொறுப்பு அரசியல் தலைவர்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள், சமயத்தலைவர்கள் எல்லோரிடமும் இருக்கின்றது என்ற அடிப்படையில் எல்லோரும் செயற்படவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US