அனோஜனை காப்பாற்ற இரண்டே வழிகள் - அநுரவின் கைகளில் இறுதி முடிவு
ஒற்றைப் பதிவால் வாழ்க்கையைத் தொலைத்து, சவூதி அரேபிய அரசாங்கத்திடம் தண்டனையைக் குறைக்குமாறு கோரிக்கை விடுக்கும் அனோஜனை காப்பாற்றுவதற்கு இரண்டு வழிகள் மாத்திரமே இருப்பதாக இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், நேற்று (21) ஜனாதிபதியை சந்தித்த அனோஜனின் தாயார் மற்றும் உறவினர்கள், அவரின் நிலைமை தொடர்பில் எடுத்துக்கூறி உதவி கோரியுள்ளனர்.
இதற்கிடையில், சமூக வலைத்தளங்களில் இந்து - முஸ்லிம் கலவரம் வெடிக்கும் வகையில் ஒரு தரப்பினர் ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எது எவ்வாறாயினும், சவூதி அரேபிய இளவரசருடன் தனிப்பட்ட முறையில் கலந்துரையாடிய பின்னரே அனோஜன் விவகாரத்தில் நல்லதொரு முடிவை எட்ட முடியும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அனோஜனின் பெயரைப் பயன்படுத்தி சமூக வலைத்தளங்களில் வெடித்து வரும் சர்ச்சைகளுக்கு அவரது தாயாரால் மாத்திரமே முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில், அனோஜனின் மரண தண்டனை விவகாரத்தில் செய்திகளுக்கு அப்பால் உள்ள மேலும் பல விடயங்கள் என்ன என்பதனை எமது “செய்திகளுக்கு அப்பால்” நிகழ்ச்சியில் விரிவாக காணலாம்.