இலங்கையில் அரசியல் கைதிகள் எவரும் இல்லை - நீதியமைச்சர்
இலங்கையில் அரசியல் கைதிகள் எவரும் இல்லை என்று அரசாங்கம் மீண்டும் அறிவித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ராசபுத்திரன் சாணக்கியன் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நீதியமைச்சர் அலி சப்ரி இதனை தெரிவித்துள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதாக அரசாங்கம் கடந்த பொதுத்தேர்தலின் போது உறுதியளித்ததாக சாணக்கியன் தெரிவித்த நிலையில் அரசியல் கைதிகள் என்று எவரும் நாட்டில் இல்லை என்று சப்ரி குறிப்பிட்டுள்ளார்.
எனினும் வழக்கு தாக்கல் செய்யப்படாமல் சிலர் சிறைகளில் இருப்பதாக சப்ரி தெரிவித்துள்ளார்.
இவர்களின் வழக்குகளை துரிதப்படுத்த சட்டமா அதிபருடனும், பிரதம நீதியரசருடனும் பேச்சுக்கள் நடத்தப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.




