எதிர்க்கட்சிகளின் கற்பனைகளுக்கு எல்லையே இல்லை! பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க கிண்டல்
எதிர்க்கட்சிகளின் கற்பனைக்கு ஒரு எல்லையே இல்லை என தொழில் பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க கிண்டலடித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை பிரதமராக நியமிப்பதற்கு ஆளும் தரப்பினால் முயற்சியொன்று மேற்கொள்ளப்படுவதாக வெளியாகும் தகவல்கள் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
எல்லையே இல்லை
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை பிரதமராக நியமிப்பதற்கு ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக குறிப்பிடப்படுவது முற்றிலும் பொய்யானது. எதிர்க்கட்சிகளின் கற்பனைக்கும் ஒரு எல்லையே இல்லை.
ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் கடந்த வாரம் அக்கட்சியின் உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைவதாகவும், தொலைபேசியில் அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டு ஊடக சந்திப்பொன்றினை நடத்தினார்கள்.
பிரதமர் பதவியில் மாற்றம்
ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் எவருக்கும் அழைப்பு விடுக்கவில்லை, எவரையும் அரசாஙகத்துடன் இணைத்துக் கொள்ள வேண்டிய தேவை இல்லை என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ அறிவித்ததன் பின்னர் தற்போது பிரதமர் பதவி குறித்து ஐக்கிய மக்கள் சக்தியினர் பேச ஆரம்பித்து விட்டார்கள்.

பிரதமர் ஹரிணி அமரசூரிய சிறந்த முறையில் செயற்படுகிறார். தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் அவர் மீது நல்லதொரு அபிப்ராயம் காணப்படுகிறது. பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது.
பிரதமர் பதவியை கேட்பதற்கு முன்னர் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் பதவியை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
கட்சியின் ஒரு தரப்பினர்கள் ஹர்ஷ டி சில்வாவை கட்சியின் தலைவராக நியமிப்பதற்கு யோசனை முன்வைத்துள்ளமை தொடர்பில் சஜித் பிரேமதாச ஆராய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்றும் பிரதியமைச்சர் மகிந்த ஜயசிங்க தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 4 நாட்கள் முன்
ட்ரோன்கள் அத்துமீறும்... நிம்மதியாக உங்களைத் தூங்க விடாது: ஐரோப்பாவிற்கு ரஷ்யா மிரட்டல் News Lankasri