விகாரைக்குச் சென்ற சிறுவனை தகாத முறைக்கு உட்படுத்திய தேரர் கைது
வெசாக் கூடுகள் தயாரிப்பதற்காக விகாரைக்குச் சென்ற 13 வயது சிறுவனை தகாத முறைக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் தேரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
இந்த சம்பவம் களுத்துறை(Kalutara) பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை, மெனேரிதன்ன பிரதேசத்தில் உள்ள விகாரையொன்றில் வசிக்கும் 27 வயது தேரர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
வைத்திய பரிசோதனை
பாதிக்கப்பட்ட சிறுவன் குறித்த சம்பவம் தொடர்பில் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ள நிலையில் சிறுவனின் பெற்றோர் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

இதனையடுத்து, சந்தேக நபரான தேரர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட சிறுவன் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நடிகர் அபிநய் உடன் 4 நாட்கள் ஒரே வீட்டில் இருந்த நடிகை.. தினமும் குடிப்பது பற்றி அவர் சொன்ன காரணம் Cineulagam
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri