திருகோணமலையில் மக்கள் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து விசேட கலந்துரையாடல்
திருகோணமலை (Trincomalee) - குச்சவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட தென்னைமரவாடி மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து தீர்வுகளை வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் இன்று (16) வரசக்தி விநாயகர் கோயில் முன்றலில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தலைமையில் குறித்த கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.
தீர்வுக்கான நடவடிக்கைகள்
குறித்த கலந்துரையாடலில், யானைகளால் ஏற்படும் பிரச்சினை, யானை வேலி, சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் இந்து மயான குறைபாடு போன்ற பிரச்சினைகள் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.

மேலும், அப்பகுதி மக்கள் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நாடாளுமன்ற உறுப்பினரிடத்தில் முன்வைத்தனர்.
இந்நிலையில், முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து தீர்வு காண்பதற்கான நவடிக்கைகளை மேற்கொள்வதாக சண்முகம் குகதாசன் மக்களிடத்தில் உறுதியளித்தார்.







| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri